ஒன்ராறியோவில் அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனையவை முடக்கம்

Report

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்ராறியோவில் உள்ள அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த ஏனைய இடங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் கடந்த திங்கட்கிழமை முதல் மாகாணம் முழுவதையும் முடக்க முதல்வர் டக் போர்ட் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இந்நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவித்த நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11:59 மணி முதல் மூடுமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த நடவடிக்கை தொடர்ந்தும் 14 நாட்களுக்கு நீடிக்கும் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.

5850 total views