கனேடிய பிரதமர் ட்ரூடோ எடுத்துள்ள முக்கிய முடிவு!

Report

கொரோனாவால் அவதிப்பட்டு வந்த பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்திருந்தாலும், தாம் சுய தனிமைப்படுத்தலில் தொடர இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

பிரதமர் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் ட்ரூடோவுக்கு கடந்த 12 ஆம் திகதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர்,

பிரதமர் ட்ரூடோ சுய தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார். தமது குடியிருப்பில் இருந்தபடியே அலுவலக பணிகளையும் செய்து வருகிறார்.

மட்டுமின்றி நாள்தோறும் நேரளையில் தோன்றி, இக்கட்டான இந்த வேளையில் நலத்திட்டங்களையும் அறிவித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலில் வாழும் கனேடியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் பேசி வருகிறார்.

இந்த நிலையில் சோஃபி கிரேகோயர் ட்ரூடோ தாம் நலம்பெற்று வந்துள்ளதை அறிவித்திருக்கிறார்.

தம்மிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று எப்படி வெளியேறியது என தெரியவில்லை என கூறியுள்ள சோஃபி,

கணவரும் பிரதமருமான ட்ரூடோ சுய தனிமைப்படுத்தலில் மேலும் சில நாட்கள் தொடர்வார் என அவர் தெரிவித்துள்ளதாக சோஃபி குறிப்பிட்டுள்ளார்.

22781 total views