விடுதியில் பெண் துஷ்பிரயோகம்... இருவரை பற்றிய தகவல் கோரும் கனடா பொலிசார்!

Report

கனடாவின் மிசிசாகா பகுதி இரவு விடுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை பீல் பிராந்திய பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் குற்றச்செயல்கள் தொடர்பாக தகவல்கள் இருப்பின் தமக்கு வழங்கும்படி, பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைதான இருவரும் பிரம்டன் பகுதியை சேர்தவர்கள் எனவும் தெரிவிகபப்டுகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 29ம் திகதி Aimco Blvd பகுதியில் Dixie வீதி பகுதியிலுள்ள இரவு விடுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரவு விடுதி பூட்டப்பட்ட பின்னர் குறித்த பெண் அங்கு வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட நிலையில், அதிகாலை 3:50 மணியளவில் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற பொலிஸார் பெண்ணை மீட்டெடுத்தனர்.

இதனையடுத்து சிறு காயங்களிற்காக குறித்த பெண் சிகிச்சையும் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை டைரன் ஜான்சோன் (31), டொனவன் கிரே (42) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளா நிலையில் அவர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைதான நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின் 905-453-2121 ext 3460 என்ற எண்ணிலோ அல்லது பீல் குற்றத்தடுப்பு பழஸ்ரீிரிவு 1-800-222-டிப்ஸ் (8477) என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

9278 total views