கொரோனாவால் வருமானத்தை இழந்திருக்கும் கனேடியர்களுக்கு மாதம் 2000 டொலர்! பிரதமரின் முக்கிய அறிவிப்பு

Report

கொரோனா வைரஸ் காரணமாக வருமானத்தை இழந்திருக்கும் நபர்களுக்கு மாதம் 2000 டொலர் வழங்கப்படும் என்றும், அதற்கான விண்ணப்பம் வரும் 6-ஆம் திகதி துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் கனடாவும் உள்ளது. இந்நாட்டில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,489-ஐ தொட்டுள்ளதுடன், 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக நாட்டின் முக்கிய எல்லைகளை மூடிய கனடா, இந்த நோயின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் காரணமாக உங்கள் வருமானத்தை இழந்திருந்தால், கனடாவின் Emergency Response Benefit உங்களுக்கு 4 மாதங்கள் வரை ஒரு மாதத்திற்கு 2,000 டொலர் வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீங்கள் முழுநேர வேலை செய்தீர்களா? ஒப்பந்தத்தில் இருந்தீர்களா? அல்லது சுயதொழில் புரிந்தீர்களா? என்பது முக்கியமல்ல நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்கள் என்றால் இந்த வாரத்தின் ஏப்ரல் 6-ஆம் திகதியில் இருந்து நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த Emergency Response Benefit -க்கான தகுதிகள் என்ன? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது தொடர்பான கேள்விகளுக்கு அரசு, https://www.canada.ca/en/services/benefits/ei/cerb-application.html என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

தகுதிகள்

  • இது தொழிலாளர்களுக்குக் கிடைக்கும்
  • கனடாவில் வசிப்பவர்கள், குறைந்தது 15 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
  • கொரோனா காரணமாக வேலை செய்வதை நிறுத்தியவர்கள் அல்லது வேலைவாய்ப்பு காப்பீடு அல்லது நோய் சலுகைகளுக்கு தகுதியானவர்கள்.
  • 2019 ஆம் ஆண்டில் அல்லது அவர்கள் விண்ணப்பித்த திகதிக்கு 12 மாதங்களுக்கு முன்னர் குறைந்தது 5,000 டொலர் வருமானம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • கொரோனா தொடர்பான காரணங்களின் விளைவாக வேலையை நிறுத்திய நபர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
  • நீங்கள் ஒரு வேலையைத் தேடுகிறீர்கள், ஆனால் கொரோனா காரணமாக வேலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், நீங்கள் இதற்கு தகுதியற்றவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

9877 total views