கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண்ணுக்கு தாய்நாட்டிலிருந்து வந்த சர்ப்ரைஸ் பரிசு!

Report

பல ஆண்டுகளுக்கு முன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு பெண்ணுக்கு சர்ப்ரைஸாக அவரது தாய்நாட்டினர் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் Jarka Webb, 18 ஆண்டுகளுக்கு முன் செக் குடியரசிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்.

முதியோர் இல்லம் ஒன்றில் மருத்துவ உதவியாளராக பணி புரியும் Jarka, எப்போதுமே தன் குடும்பத்தாருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பிலிருப்பவர்.

அதிலும் இந்த கொரோனா பரவலுக்குப் பிறகு அதிக அளவில் செக் குடியரசிலுள்ள தனது குடும்பத்தாருடன் தொடர்பிலிருக்கிறார்.

அப்போது Jarkaவுக்கு உதவுவதற்காக செக் குடியரசிலுள்ள சில பெண்கள் கூடி மாஸ்குகளை தைத்து அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள்.

அதன்படி, சர்ப்ரைஸாக Jarkaவுக்கு ஒரு பார்சலை அனுப்பியிருக்கிறார்கள் அவர்கள். அதைப் பிரித்துப்பார்த்த Jarkaவுக்கு, தன் நாட்டு மக்களின் அன்பை எண்ணி சந்தோஷத்தில் கன்ணீரே வந்திருக்கிறது.

ஆம், கொரோனா பரவும் நேரத்தில், முதியோர்களுக்கு சேவை செய்யும் தனக்கு பொருத்தமான பரிசை தன் நாட்டவர்கள் அனுப்பியுள்ளது கண்டு நெகிழ்ந்துபோயிருக்கிறார் Jarka.

அந்த பார்சலில் கையால் செய்யப்பட்ட மொத்தம் 650 மாஸ்குகள் இருந்திருக்கிறது. அவற்றில் சிலவற்றை அவசர தேவைக்காக சேமித்து வைத்தாலும், பெரும்பாலானவற்றை தேவையிலிருப்போருக்கு வழங்க முடிவு செய்துள்ளார் Jarka.

16138 total views