கனடாவில் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்த 8 வயது சிறுவன்!

Report

கனடாவில் திடீரென 8 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள north Okanagan பகுதியில் இருந்து எங்களுக்கு அவசர உதவி கோரி போன் வந்தது.

அங்கு சென்ற போது உயிருக்கு போராடிய 8 வயது சிறுவனை மீட்டு Kelowna General மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துவிட்டான்.

சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் சிறுவனின் மரணத்துக்கான காரணம் குறித்து தற்போது கூற முடியாது.

இது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளனர்.

11726 total views