ஒட்டாவாவிலுள்ள பிரபல உணவக கட்டடத்தில் தீவிபத்து!

Report

ஒட்டாவாவிலுள்ள பிரபல உணவகமான கோக்கனட் லகூன் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டடத்தில் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இதனயடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்தின் போது, ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்தாகவும், அவர் தற்போது காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவசரகால குழுவினர் வருவதற்கு முன்பு குடியிருப்பாளர்கள் அனைவரும் கட்டடத்திற்கு வெளியே இருந்ததாக ஒட்டாவா துணை மருத்துவர்கள் கூறினர்.

உணவகத்திற்கு மேலே உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனினும் சேத விபரங்கள் எதுவும் மதிப்பிடவில்லை.

மேலும் இந்த தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2433 total views