கனடாவில் ஒரு வாரத்திற்கு பிறகு குறைந்த உயிரிழப்பு!

Report

கனடாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 69 பேர் உயிரிழந்ததோடு, 1,078பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 18ஆம் திகதிக்கு பிறகு கனடாவில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,424ஆக உயர்ந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84,699ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 34,290பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 43,985பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

7706 total views