வடக்கு சஸ்காட்செவன் ஆற்றுக்கு செல்லவேண்டாம் - தீயணைப்பு மீட்பு சேவைகள் எச்சரிக்கை

Report

வடக்கு சஸ்காட்செவன் ஆற்றுக்கு செல்லவேண்டாமென அப்பகுதி மக்களுக்கு, எட்மண்டன் தீயணைப்பு மீட்பு சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வால்டர்டேல் பாலம் அருகே நேற்று காலை ஒரு நாயை மீட்டப்பின்னர், எட்மண்டன் தீயணைப்பு மீட்பு சேவைகள் (ஈ.எஃப்.ஆர்.எஸ்) குடியிருப்பாளர்களை வடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆற்றில் நீர் மட்டங்கள் விரைவாக உயரும்போது, அதில் மிதக்கும் குப்பைகளின் அதிகரிப்புடன், யாரும் அருகில் இருப்பதும் பாதுகாப்பற்றது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், எட்மண்டோனியர்களையும் அவர்களின் செல்லப்பிராணிகளையும் ஆற்றங்கரையில் இருந்து விலகி இருக்க வேண்டுமென, எட்மண்டன் தீயணைப்பு மீட்பு சேவைகள் கேட்டுக் கொண்டுள்ளது.

1612 total views