கொசுக்களால் கொரோனா வைரஸ் பரவுமா? கனடா மருத்துவரின் பதில்!

Report

டெங்கு முதலான சில நோய்கள் கொசுக்கள் மூலமாக பரவும் நிலையில், கொரோனா கொசுக்களால் பரவுமா?

ஆல்பர்ட்டாவின் தலைமை மருத்துவ அலுவலர் முன் இந்த கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு ட்விட்டரில் அவர் பதிலளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இன்றைய திகதிக்கு கொரோனா கொசுக்களால் பரவும் என்பதற்கு ஆதாரமோ அல்லது அது குறித்த தகவல்களோ கூட இல்லை என்று கூறியுள்ளார் அவர்.

கொரோனா ஒரு சுவாசக்கோளாறை உண்டுபண்ணும் ஒரு வைரஸ்.

அது பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது அல்லது பேசும்போது அவரது எச்சில் மற்றும் மூக்கிலிருந்து வெளியேறும் திரவ துளிகள் மூலம் பரவக்கூடியது.


உலக சுகாதார அமைப்பும் கொசுக்களால் கொரோனாவைப் பரப்ப இயலாது என்றே கூறுகிறது. மனித்தோபா பல்கலைக்கழக ஆய்வாளரான Dr. Jason Kindrachuk, கொரோனா குறித்து கவலைப்பட என்னென்னெவோ இருந்தாலும், கொசுக்களைக் குறித்து கவலைப்படவேண்டாம் என்று கூறியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இந்த வைரஸையோ அல்லது அதன் குடும்பத்தைச் சேர்ந்த பிற வைரஸ்களையோ பூச்சிகள் சுமப்பதில்லை என்று கூறும் அவர், ஆகவே அவை மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு மிகக்குறைவே என்கிறார்.

6298 total views