கனடாவில் முதியோர் இல்லங்களுக்கு இராணுவத்தை அனுப்பிய பிரதமர்... அதிரவைக்கும் அறிக்கையை அளித்த ராணுவம்!

Report

கொரோனாவைத் தொடர்ந்து முதியோர் இல்லங்களில் மரணங்கள் அதிகரித்ததையடுத்து, ஒன்ராறியோவும், கியூபெக்கும் உதவி கோரியதைத் தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராணுவத்தை அனுப்பினார்.

ஆனால், அங்கு சென்ற ராணுவம் அளித்த அறிக்கை தன்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ அரசு அளித்துள்ள அந்த அறிக்கை, அந்த முதியோர் இல்லங்களில் தங்கியிருப்போர் பல நாட்களாக குளிக்கவைக்கப்படவில்லை என்றும், முதியோர் மலத்துடனேயே பல மணி நேரம் சுத்தம் செய்யப்படாமலேயே விடப்பட்டிருப்பதாகவும், கொரோனா நோயாளிகள் சர்வசாதாரணமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.

ரொரன்றோ முதியோர் இல்லத்தில் பணி புரிவோர், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாகவும், வலியால் தவிக்கும் முதியோரை இரண்டு மணி நேரம் வரை கூட கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எறும்புகளும் கரப்பான் பூச்சிகளும் சர்வசாதாரணமாக நடமாடும் அந்த இல்லங்களில், சுத்தத்துக்கும் சுத்தம் செய்தலுக்கும் பெரிய இடைவெளி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு போதுமான பயிற்சி இல்லையென்றும், அவர்கள் நோயாளிகளை முரட்டுத்தனமாக படுக்கையிலிருந்து இழுத்து மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையைப் படித்த தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக வேதனை தெரிவித்துள்ள கனடா பிரதமர் ட்ரூடோ, முதியோர் இல்லங்களில் காணப்படும் நிலைமையை மாற்ற அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

ஒன்ராறியோ பிரீமியரான Doug Fordம், இத்தகைய கொடுமைகளை செய்தவர்கள் கணக்கு கொடுக்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதோடு அந்த அறிக்கை பொலிசாருக்கு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

17005 total views