கனடாவில் பற்றியெரியும் வீடு ஒன்றிற்குள் துணிச்சலாக நுழைந்த நபர்...

Report

கனடாவின் எட்மண்டனில் வீடு ஒன்று பற்றியெரிய துணிச்சலாக வீட்டுக்குள் நுழைந்துள்ளார் ஒருவர்.

வீடு ஒன்று பற்றியெரிவதைக் கண்டு அப்பகுதி மக்கள் திரண்டு தீயை அணைக்க முயன்றிருக்கிறார்கள்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த Shawn Dowling என்பவர், வீடு பற்றியெரியும் நிலையிலும் துணிச்சலாக வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

Shawnம் சில அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் முதலில் அந்த வீட்டுக்கருகே சென்று, உள்ளே யாராவது இருக்கிறீர்களா என்று சத்தமாக கேட்டிருக்கிறார்கள்.

சத்தம் ஏதும் வராமல் போகவே, வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார் Shawn.

துணிச்சலாக தீப்பற்றியெரியும் வீட்டுக்குள் நுழைந்ததைக் குறித்துக்கேட்டால், ஒரு வேளை உள்ளே யாராவது சிக்கிக்கொண்டிருந்தால் என்ன ஆவது என்று எண்ணித்தான் உள்ளே நுழைந்தேன் என்கிறார் Shawn.

அதுதானே ஒரு சமுதாயம் என்பது, அயலகத்தார் அதற்குத்தானே இருக்கிறோம் என வரிசையாக கேள்வி கேட்கிறார் Shawn.

வீட்டுக்குள் நுழைந்து தேடிய நிலையில், உள்ளே யாரும் இல்லை என்பது தெரியவர, வீட்டுக்குப் பின்னால் ஓடியிருக்கிறார்கள் Shawnம் மற்றவர்களும்.

அங்கு அந்த வீட்டுக்காரர் தண்ணீர்குழாய் ஒன்றை வைத்து தீயை அணைக்க முயற்சி செய்துகொண்டிக்க, அவர் பத்திரமாக இருக்கிறார் என்பது தெரிந்ததும்தான் நிம்மதியடைந்திருக்கிறார் Shawn. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

11724 total views