கனடாவில் இரவு தூங்க செல்லும் முன்னர் பெரும் அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரர் ஆன நபர்!

Report

கனடாவில் இரவு தூங்க செல்லும் முன்னர் தான் வாங்கிய லொட்டரி சீட்டுகள் குறித்து ஞாபகம் வந்த நபர் அதை பார்த்த போது தனக்கு $25 மில்லியன் பரிசு விழுந்ததை உறுதி செய்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் Ronald ‘Ron’ Cumiskey. இவர் சில தினங்களுக்கு முன்னர் இரவு உணவு சாப்பிட்டு விட்டு விளக்குகளை அணைத்து தூங்க சென்றார்.

அப்போது தான் வாங்கிய லொட்டரி சீட்டுகள் குறித்து Ronald-க்கு நினைவுக்கு வந்தது.

இதையடுத்து ஓன்லைன் மூலம் பரிசு விழுந்ததா என பார்த்த போது அவருக்கும் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. ஏனெனில் Ronald-க்கு கிட்டத்தட்ட $25 மில்லியன் பரிசு விழுந்தது தெரியவந்தது.

இது குறித்து Ronald கூறுகையில், நான் 20 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்.

பரிசு கிடைத்தது உறுதி செய்யப்பட்ட பின்னர் என் முதலாளிக்கு போன் செய்து நான் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறேன், ஏனெனில் எனக்கு பெரிய பரிசு விழுந்துள்ளது என கூறினேன்.

பரிசு பணத்தில் Pearl Harbor மற்றும் East Coast of Canadaவுக்கு செல்ல வேண்டும் என ஆசை உள்ளது.

மேலும் எனக்கு பிடித்த நபர்களை நான் கவனித்து கொள்ள வேண்டும் மற்றும் உதவ வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என் கூறியுள்ளார்.

19131 total views