ஜார்ஜ் பிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற ஜஸ்டின் ட்ரூடோ

Report

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதை கண்டித்து அந்நாடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருப்பகுதியாக கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் No justice, No peace என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார்.

கறுப்பு நிற மாஸ்க் அணிந்து தனது பாதுகாவலர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ திடீரென முழங்காலிட்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

பிரதமரின் இந்த செயல்பாடு போராட்டகாரர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மற்றொரு தரப்பினர் பிரதமர் தேவையில்லாமல் விளம்பரம் தேடி கொள்வதாக விமர்சித்து வருகின்றனர்.

13177 total views