வெளிநாட்டு பயணிகள் மீதான தடையை நீட்டிக்கிறது கனடா!

Report

பன்னாட்டுப் பயணிகளுக்கான தற்போதைய தடையை ஜூலை 31ஆம் திகதி வரை கனேடிய அரசாங்கம் நீட்டித்துள்ளது.

மார்ச் நடுப்பகுதியில் கோவிட்-19 பரவுவதை மட்டுப்படுத்த, மத்திய அரசு முதலில் கனடியரல்லாத குடிமக்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன் எல்லையை மூடியது.

ஜூன் 29ஆம் திகதியிட்ட சுகாதார அமைச்சர் பாட்டி ஹஜ்து பரிந்துரைத்த கூட்டாட்சி உத்தரவின் மூலம் வெளிநாட்டு பயண தடை குறித்த நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த தடை நிரந்தர கனேடிய குடியிருப்பாளர்கள், கனேடிய குடிமக்களின் மிகநெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திரிகள் மற்றும் விமானக் குழுக்கள் ஆகியோரை கனடாவுக்குள் வர அனுமதிக்கிறது. இருப்பினும் கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட எவரும் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை அமெரிக்காவுக்கு விலக்கு அளிக்கிறது. இது மற்ற அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் நிறுத்திய சிறிது நேரத்திலேயே கனடாவுடன் தனி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அமெரிக்க பயணக் கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் ஜூலை 21ஆம் திகதி வரை புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது அனைத்து சமயோசிதப் பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

மேலும்கனடாவிற்குள் நுழையும் எந்தவொரு அத்தியாவசியமற்ற தொழிலாளிக்கும் கட்டாய 14 நாள் சுய தனிமைப்படுத்தல் என்பது தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் மற்ற எல்லா கூறுகளையும் போலவே நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

12379 total views