கனடாவிலுள்ள கியூபெக் நகரில் பரபரப்பு சம்பவம்... ரயில் நிலையத்திலிருந்து மக்களை வெளியேற்றிய பொலிசார்!

Report

நேற்று மாலை கியூபெக் நகரில் வெடிகுண்டு இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

Gare du Palais ரயில் மற்றும் பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டு இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்தனர்.

கியூபெக் ரயில் நிலையத்திலிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு, சுற்று வட்டாரத்திலிருந்த மக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

மோப்ப நாய்களும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டதாக கியூபெக் நகர பொலிஸ் செய்தி தொடர்பாளர் David Pelletier தெரிவித்தார்.

அந்த பகுதி முழுவதும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, மூன்று மணி நேரம் பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதுவரை சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படாத நிலையில், வழக்கு கியூபெக் பெருங்குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

6111 total views