கனடாவில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்று தண்ணீரில் முக்கி கொல்ல முயன்ற இளைஞன்!

Report

கனடாவில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்று தண்ணீரில் முக்கி கொல்ல முயன்ற இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Nova Scotia-வின் Granville Ferry கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

30 வயது இளைஞனான Alexander Jacob O'Grady என்பவர் இளம்பெண் ஒருவரை தரதரவென இழுத்து கொண்டு அங்குள்ள ஆற்றின் அருகில் சென்றுள்ளார்.

பின்னர் ஆற்று தண்ணீரில் அப்பெண்ணின் தலையை முக்கி கொலை செய்ய முயன்றுள்ளார் Alexander.

இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த மக்கள் உடனடியாக Alexander-ஐ தடுத்து அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மிதமான காயங்களுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து Alexander-ஐ பொலிசார் கைது செய்தார்கள்.

அவர் மீது கொலை முயற்சி, உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் தாக்குதல், மூச்சுத்திணறல் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட Alexander வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

10040 total views