கனடா பிரதமரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த கருப்பு நிற ட்ரக்கால் பரபரப்பு!

Report

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டு கதவை உடைத்துக்கொண்டு கருப்பு நிற ட்ரக் ஒன்று உள்ளே நுழைந்துள்ளது.

அத்துடன், ட்ரக்கில் இருந்த நபரிடம் மூன்று துப்பாக்கிகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கவர்னர் ஜெனரல் ஆகியோரின் வீடுகள் ஒரே காம்பவுண்டிற்குள் உள்ளன.

இந்நிலையில், நேற்று அதிகாலை 6.30 மணிக்கு, வேகமாக வந்த கருப்பு நிற ட்ரக் ஒன்று பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, முக்கிய வாயில் மீது மோதி கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.

சிறிது தூரம் காம்பவுண்டிற்குள் சென்றதும் அந்த ட்ரக் நிற்க, அதிலிருந்து இறங்கிய ஒருவர் பிரதமர் வீட்டை நோக்கி நடந்துள்ளார்.

அதற்குள் ஓடி வந்த பொலிசார் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் மூன்று துப்பாக்கிகள் இருந்துள்ளன.

விசாரணையில், தான் பிரதமரை சந்தித்து அவருடன் பேச வந்ததாகவும், அவரை தாக்குவதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் மனித்தோபாவிலிருந்து 1,900 மைல்கள் பயணித்து வந்ததாக கருதப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக சம்பவம் நடந்த நேரத்தில் பிரதமர் குடும்பமோ, கவர்னர் ஜெனரலோ வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

15835 total views