கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 21பேர் உயிரிழப்பு!

Report

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 319பேர் பாதிப்படைந்ததோடு, 21பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 5,091ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரொனாவால் 8 ஆயிரத்து 663பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவெளை 27,735பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 68,693பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 2,118பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3495 total views