கனடாவில் 86 வயது பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... அதன் சுவாரசிய பின்னணி!

Report

கனடாவில் 86 வயது பெண்ணுக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ள நிலையில் அதன் சுவாரசிய பின்னணி குறித்து தெரியவந்துள்ளது.

Brantford நகரை சேர்ந்தவர் Elizabeth Hardwicke (86). இவர் LOTTO 6/49 மற்றும் LOTTO MAX ஆகிய இரண்டு வகையான லொட்டரி டிக்கெட்கள் வாங்கினார்.

இந்த லொட்டரி டிக்கெட்களுக்கு பரிசு விழுந்ததா என மளிகை கடைக்கு சென்று பார்த்த போது LOTTO MAX டிக்கெட்டுக்கு பரிசு விழவில்லை என்பதை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து லொட்டரி டிக்கெட்டை கிழித்து எறிந்தார். ஆனால் Elizabeth வாங்கிய LOTTO 6/49 லொட்டரி டிக்கெட்டுக்கு $100,000 பரிசு விழுந்தது. அப்போது தான், பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட்டை கிழித்து விட்டோமோ என குழம்பி கவலையடைந்தார்.

பின்னர் தனது பையில் தேடிய போது LOTTO 6/49 டிக்கெட் இருந்தது. இதையடுத்து மகிழ்ச்சியடைந்த Elizabeth பரிசு பணத்தை பெற்றுள்ளார்.

அவர் கூறுகையில், வரி இல்லாத சேமிப்புக் கணக்கு தொடங்கவுள்ளேன்.

என் குடும்பத்தாருக்கு பரிசு பணத்தில் ஒரு பகுதியை கொடுப்பேன் என கூறியுள்ளார்.

8429 total views