கனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவர் குறித்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்!

Report

கனடா பிரதமர் வீட்டு காம்பவுண்டு சுவரில் டரக்கை மோதி அத்து மீறி நுழைந்தவரால் பிரதமர் உயிருக்கு ஆபத்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற வியாழனன்று, ட்ரக் ஒன்று கனடா பிரதமர் வீட்டு காம்பவுண்ட் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது.

அதிலிருந்த Corey Hurren (46) என்பவர், 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் கனடா பிரதமர் குடும்பம் அங்கு இல்லை. சில கனேடிய பத்திரிகைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் இது ஒரு கொலை முயற்சி என்று கூறியதாக தெரிவித்துள்ளன.

Hurren நன்றாக தெரிந்தே பிரதமருக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது அச்சுறுத்தலை தெரியப்படுத்துபவராகவோ இருந்துள்ளார் என்றும், அல்லது பிரதமர் உயிருக்கு ஆபத்து அல்லது உடலுக்கு சேதத்தை ஏற்படுத்துவதற்காகவே அவரது இல்லத்திற்கு வந்துள்ளார் என்று அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மனித்தோபாவைச் சேர்ந்த Hurren மீது 22 கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பொலிசார் சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் Hurren நான்கு துப்பாக்கிகளை தன்னுடன் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

9080 total views