கோவிட்-19 பாதிப்புகளுடன் இரு வாரங்களுக்குள் 26 விமானங்கள் கனடா வருகை!

Report

கடந்த இரண்டு வாரங்களுக்குள், கோவிட்-19 பாதிப்புகளுடன் குறைந்தது 26 விமானங்கள் கனேடிய விமான நிலையங்களுக்கு வந்துள்ளன.

மத்திய அரசின் கூற்றுப்படி, ஜூன் 29ஆம் திகதி முதல் 10 உள்நாட்டு விமானங்கள் மற்றும் 16 சர்வதேச விமானங்களில் கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த பட்டியல் முழுமையானது அல்ல. இது பன்னாட்டுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது வலைத்தளங்கள், மாகாண மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் மெக்ஸிகோ நகரம், கான்கன், சூரிச், பாரிஸ், அடிஸ் அபாபா, இஸ்லாமாபாத், லாகூர், கத்தார், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன், டி.சி., டல்லாஸ், டெட்ராய்ட் மற்றும் வட கரோலினாவின் சார்லோட்டிலிருந்து மூன்று விமானங்களில் இருந்து கனேடிய விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்தவை.

இந்த நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் சஸ்காட்செவனில் உள்ள சுகாதார அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களில் அந்த 11 விமானங்களில் பயணம் செய்தவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

4622 total views