கனடாவில் சொக்லேட் கொடுத்து சிறுமியை வேனில் கடத்த முயன்ற நபர்... சம்பவத்தின் புதிய புகைப்படங்கள்

Report

கனடாவில் சிறுமியை வேனில் கடத்த முயன்ற நபர் தொடர்பிலான புதிய புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்றோவில் தான் இந்த சம்பவம் கடந்த 2ஆம் திகதி நடந்துள்ளது.

டுன்வியூ அவென்யூவில் 2ஆம் திகதி மாலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள் சிறுமி ஒருவர் மிதிவண்டி ஓட்டி கொண்டிருந்தார்.

அப்போது வேனில் வந்த நபர், சிறுமியிடம் சொக்லேட் கொடுத்து வேனில் ஏறு என கூறியுள்ளார். ஆனால் உஷாரான சிறுமி அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.

வேனில் வந்த மர்ம நபரின் வயது 40ல் இருந்து 50க்குள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் வந்த வேனின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த மர்ம நபர் வேனில் உட்கார்ந்திருக்கும் நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7316 total views