கனடாவில் கொரோனாவால் 24 மணித்தியாலத்தில் 513பேர் பாதிப்பு

Report

சீனாவின் வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி நாளுக்குநாள் அதிகளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் 513பேர் பாதிப்படைந்ததோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,312ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8,935பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

6,150பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 1,01,227பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2,249பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2522 total views