கனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்!

Report

கனடாவின் ஆர்க்டிக் கரையோரமாக பிரமாண்ட உருண்டைக்க ற்கள் சில கிடப்பது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Ida Pikuyak என்பவர் அப்படி ஒரு கல்லின் அருகில் நிற்கும் புகைப்படம் பேஸ்புக்கில் 1,700 முறை பகிரப்பட்டது, மக்களுக்கு இயற்கை மீது இருக்கும் ஆர்வத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளது எனலாம்.

அவை என்ன, டைனோசர் முட்டைகளா, விண்கற்களா அல்லது இதெல்லாம் ஏதோ ஏலியன்களின் கைவேலையா என ஆளாளுக்கு மக்கள் தங்கள் ஆர்வத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

உண்மையில் அவை என்ன? அவை இயற்கையின் நிகழ்வான concretions என்னும் ஒரு நிகழ்வின்மூலம் உருவாகும் கற்களாகும்.

எப்படி சிமெண்டும், கற்களும் தண்ணீரும் சேரும்போது காங்கிரீட் என்னும் கடினமான பொருள் உருவாகிறதோ, அப்படி இயற்கையே உருவாக்கியுள்ள விடயம்தான் இந்த கற்கள். தண்ணீர் ஓடும் இடங்களுக்கு அருகில் சேறு, மண் முதலானவை சேரும்போது அவை ஒரு குவியலாக மாறுகின்றன.

காலப்போக்கில், சிப்பிகள், இலைகள், ஃபாசில்கள் ஆகியவை ஓடும் தண்ணீரால் அடித்துவரப்பட்டு அந்த குவியலின் மீதே தொடர்ந்து குவிகின்றன.

சில இடங்களில் இந்த குவியல்கள் வெறும் குவியல்களாகவே நீடிக்கும் நிலையில், சில இடங்களில் மட்டும் சுண்ணாம்பு போன்ற பொருட்கள் அந்த குவியல் மீது படிகின்றன. பல மில்லியன் ஆண்டுகள் ஆகும்போது, மேலும் மேலும் பொருட்கள் அந்த குவியல் மீது படிந்து அவை இதுபோன்ற கடினமான கற்களாக மாற்றம் பெறுகின்றன.

அதாவது கனடாவில் காணப்படும் இந்த உருண்டைக் கற்கள், இன்றோ நேற்றோ உருவானவை அல்ல, அவை பல மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை என்று பொருள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், நீர் நிலைகள் இல்லாத ஆல்பர்ட்டாவின் Red Rock Coulee, அல்லது கசகஸ்தானின் பந்துகள் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களிலும் இவற்றைக் காணமுடிகிறது என்பதுதான்.

10178 total views