கனடாவில் இலங்கையர் ஒருவர் கொடுத்த விளம்பரத்தால் அவருக்கு காத்திருந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

Report

தன் தாயின் பூத்தொட்டியை விற்பதற்காக கனடாவில் இலங்கையர் ஒருவர் சமூக ஊடகம் ஒன்றில் கொடுத்த விளம்பரம் ஒன்று, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

Markhamஇல் வாழும் Nashat Cassimஇன் தாய் தனது பூத்தொட்டியை பேஸ்புக்கில் விற்பதற்காக விளம்பரம் ஒன்றைக் கொடுக்கச் சொன்னார்.

அதன்படி விளம்பரம் கொடுத்த Cassimஐ ரொரன்றோவில் வாழும் Karen Ayotte என்ற பெண்மணி தொடர்புகொண்டு, தனக்கு அந்த பூத்தொட்டி வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த பெயர் தனக்கு மிகவும் பரிச்சயமானதாக தோன்ற, Cassimஇன் நினைவுகள் சட்டென 20 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்துள்ளன.

1997ஆம் ஆண்டு, தனக்கு ஐந்து வயது இருக்கும்போது, தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் இலங்கையிலிருந்து வந்தவர் Cassim.

புதிய நாடு, புதிய பள்ளி என அந்த சிறுவனுக்கு பயத்தை ஏற்படுத்திய சூழல் நிலவிய நிலையில், அவன் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

அவனது பள்ளியிலிருந்து இரு கிண்டர்கார்டன் ஆசிரியைகள் Cassimஐ சந்திக்க வந்திருந்தார்கள்.

பள்ளி செல்ல தேவையான பொருட்களுடன், அன்பும் ஆதரவுமாக அவர்கள் மேற்கொண்ட அந்த சந்திப்பு, மீண்டும் மீண்டும் கல்வியாண்டு முடியும் வரை தொடர்ந்தது. அது Cassimக்கு ஒரு அளவிடமுடியாத ஒரு தைரியத்தைக் கொடுத்தது.

பின்னர் Markhamக்கு வீடு வாங்கி குடிபோய்விட்டது அவரது குடும்பம். பள்ளிப் படிப்பு முடித்து, பட்டமும் பெற்று இப்போது குழந்தைகளுக்கான ஒரு பல் மருத்துவராக பயிற்சி பெறும் Cassimக்குதான், Karen Ayotte என்ற அந்த பெண்ணின் பெயர் நினைவுக்கு வந்தது.

ஆம், Cassimஐத் தேடி வீட்டுக்கு வந்த ஆசிரியைகளில் ஒருவர்தான் Karen Ayotte (64). மற்றொருவர் Ms. Gibson.

தனது ஆசிரியை Ayotteஐ தொலைபேசியில் தொடர்புகொண்ட Cassim, தான்தான் அவர்கள் 23 ஆண்டுகளுக்கு முன் தேடி வந்த சிறுவன் Cassim என்று கூற, Ayotteக்கு ஆச்சரியம் தாங்க இயலவில்லை.

மகிழ்ச்சியில் திளைக்கும் Ayotte, Cassim வாழ்க்கையில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என புளகாங்கிதம் அடைகிறார்.

ஒருவரையொருவர் சந்திக்க திட்டமிட்டுள்ள Cassimம், அவரது ஆசிரியைகளான Ayotte மற்றும் Ms. Gibsonம், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழல் நீங்கி பாதுகாப்பான ஒரு நேரம் வருவதற்காக காத்திருக்கிறார்கள்.

35696 total views