சிறையிலடைக்கப்பட்ட பாகிஸ்தானிய பெண்ணிற்கு அடைக்கலம் கொடுத்த கனடா: இன்று அவர் எப்படியிருக்கிறார் தெரியுமா?

Report

மத தூஷணம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, தாங்கொணா துயரம் அனுபவித்து, பின் கனடா அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தானிய பெண் ஆசியா பீவியை நினைவிருக்கலாம்...

இன்று, நான் எனது தாய்நாட்டில் எனது பிள்ளைகளுடன் வாழ்கிறேன் என்கிறார் ஆசியா! அவர் தாய்நாடு என குறிப்பிடுவது கனடாவை...

பாகிஸ்தானில் மத தூஷணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2009ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் ஆசியா.

ஆசியாவுக்காக குரல் கொடுத்தவர்களும் கொல்லப்பட்டார்கள் பாகிஸ்தானில். 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னர் Salman Taseer, ஆசியாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரியதற்காக கொலைசெய்யப்பட்டார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இத்தகைய சட்டங்கள் மாற்றப்படவேண்டும் என்று கோரிய கிறிஸ்தவ கேபினட் அமைச்சரான Shabaz Bhatti சுட்டுக் கொல்லப்பட்டார்.

10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடியாக ஆசியாவை விடுவித்தது.

பாகிஸ்தானில் அவரது விடுதலையை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டு நாடே கொந்தளித்திருந்த நிலையில், ஆசியாவுக்கு 2019இல் அடைக்கலம் கொடுத்தது கனடா.

தான் இருக்கும் இடம் தெரிந்தால், இனமும் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் ஆபத்துதான் என்று கூறும் ஆசியா, தான் தற்போது தனது மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார்.

தனக்கு இரண்டாவது வாழ்க்கை கொடுத்த கனடாவுக்கு தான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறுகிறார் ஆசியா பீவி.

7848 total views