மருத்துவர் அறைக்குள்ளிருந்து கேட்ட அலறல்: கனடாவில் நிகழ்ந்த கோர சம்பவம்!

Report

கனடா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் மருத்துவரை சந்திப்பதற்காக காத்திருக்கும் நேரத்தில், உதவி, உதவி, அவசர உதவியை அழையுங்கள் என மருத்துவர் அறைக்குள்ளிருந்து ஒரு மரண ஓலம் கேட்க, நோயாளிகள் நடுங்கிப்போயிருக்கிறார்கள்.

அலறியது வேறு யாருமல்ல, மருத்துவரேதான்... Red Deer பகுதியில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் அப்போதுதான் மருத்துவர் அறைக்குள் ஒருவர் சென்றிருக்கிறார்.

அந்த நிலையில் இந்த அலறல் சத்தம் கேட்கவே, இரண்டு ஆண் நோயாளிகள் ஓடிச் சென்று மருத்துவர் அறைக்குள் எட்டிப்பார்த்துவிட்டு, அந்த நபர் மருத்துவரை சுத்தியலால் தலையில் தாக்குகிறார் என்று சத்தமிட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஓடி வந்த அந்த ஆண் நோயாளிகள் இருவரும், அந்த நபர் வெளியே வந்தால், அவர் தப்பிவிடாமல் இருப்பதற்காக கதவைப் பிடித்துக்கொண்டு, தாக்குதலை நிறுத்த ஏதாவது இருக்கிறதா என்று கேட்க, ஒரு தம்பதி பெப்பர் ஸ்பிரேயை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், அதற்குள் சம்பவ இடத்துக்கு வந்துவிட்ட பொலிசார், பொதுமக்களை வெளியேறச் சொல்லிவிட்டு, தாங்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

துப்பாக்கிகளுடன் மருத்துவமனையை 10 பொலிசார் சூழ்ந்துகொள்ள, பொலிசார் ஒருவர், சுத்தியலைக் கீழே போடு, இல்லாவிட்டால் சுட்டுவிடுவேன் என்று கூற, அந்த நபர் இரத்தம் தோய்ந்த அந்த சுத்தியலைத் தூக்கி அந்த பொலிசார் மீதே வீசியிருக்கிக்கிறார்.

சற்றே விலகியதால் தப்பிய அந்த பொலிசார், அந்த நபர் கையில் ஒரு பட்டாக்கத்தியும் இருப்பதைக் கண்டு, கத்தியைக் கீழே போடு என்று மீண்டும் கத்தியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து 10 பொலிசாரும் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். பின்னர் கைவிலங்குடன் ஒரு நபரை பொலிசார் அழைத்து வருவதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால், சுத்தியலால் அடிக்கப்பட்ட மருத்துவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது பெயர் வெளியிடப்படாத நிலையில், அவர் நோயாளிகளிடம் மிகவும் அக்கறை காட்டக்கூடிய மருத்துவர் என்கிறார்கள் அவரது நோயாளிகள்.

அந்த நபர் யார், அவர் எதற்காக மருத்துவரை கோரமாக தாக்கிக் கொன்றார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

18317 total views