கனடாவில் கோர விபத்து: அப்பளம் போல் நொறுங்கிய 5 வாகனங்கள்! பெண் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்

Report

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

கனடாவிலுள்ள சாலை ஒன்றில் ஐந்து வாகனங்கள் ஒன்று மீது ஒன்று மோதி கொண்ட விபத்திலே குறித்த பெண்மணி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து முன்னால் இருந்த 4 வாகனங்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இதில் அந்த வாகனங்கள் அப்பளம் போல நொறுங்கின.

இந்த வாகனங்களில் மொத்தமாக 9 பேர் இருந்த நிலையில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 87 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது தீயணைப்பு வீரர்கள் காரில் இருந்து உள்ளிருந்தவர்களை வேகமாக வெளியில் இழுத்ததால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

9784 total views