கனடாவின் முக்கிய நகரங்களை தாக்கும் கொரோனா 2ஆவது அலை! மக்களே அவதானம்

Report

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மற்றும் ஒன்ராறியோவில் ஒரே நாளில் 1,000 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

அதிலும் கியூபெக்கில் மட்டும் 586 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.

இது முந்தைய தினத்தில் தொற்றுக்கு ஆளானவர்களைவிட எண்ணிக்கையில் 100 அதிகமாகும்.

எனவே, கியூபெக் மாகாணத்தின் பொது சுகாதாரத்துறையின் இயக்குநரான Dr. Horacio Arruda அந்த மாகாணத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், இந்த சூழல் என்னை மிகவும் அதிகமாக வருத்தமடையச் செய்துள்ளது, இப்போது நாம் கொரோனாவின் இரண்டாவது அலையில் இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நாம் கொரோனாவின் இரண்டாம் அலையின் துவக்கத்தில் இருக்கிறோம் என்றார்.

அதே நேரத்தில், நாம் முயன்றால் முன்பு செய்தது போலவே அதை ஒரு சிறிய அலையாக மாற்றிவிட முடியும், ஆனால், முயற்சி செய்யாவிட்டால், அது முதல் அலையை விட பெரிதாக இருக்கலாம் என்றார் அவர்.

16562 total views