கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 23 பேர் உயிரிழப்பு!

Report

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 374பேர் பாதிக்கப்பட்டதுடன் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 94ஆயிரத்து 106பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9ஆயிரத்து 722பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

அத்துடன் , 20ஆயிரத்து 740பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஒரு இலட்சத்து 63ஆயிரத்து 644பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 188பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2908 total views