கொரோனா தொற்றை அலட்சியமாக பார்த்த கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

Report

கனடாவை சேர்ந்த இளம்பெண் கொரோனா வைரஸ் தன்னை தாக்காது என அதை சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை தொட்டு விட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

Vancouver-ஐ சேர்ந்தவர் Alison Lowe (31). சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்களுடன் ஜாலியாக வெளியில் சுற்று திரிந்துள்ளார்.

அதாவது வலிமை வாய்ந்த தன்னையும், தன் நண்பர்களையும் கொரோனா தாக்காது என கொடிய நோயை சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் Alisonன் நண்பர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து செப்டம்பரில் கொரோனாவால் Alison பாதிக்கப்பட்ட நிலையில் 16 நாட்கள் மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.

பின்னர் ஒருவழியாக கடந்த 10ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

Alison கூறுகையில், கொரோனாவை நான் சாதாரணமாக எடுத்து கொண்டேன், அதன் விளைவு என்னை வைரஸ் தாக்கியது. என் உடல் நிலை மோசமானதால் நான் பிழைப்பது கடினம் என்றே மருத்துவர்கள் கருதினார்கள்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் உயிர் பிழைத்தேன், இது மருத்துவர்களையே ஆச்சரியமடைய வைத்தது.

நான் வீடு திரும்பிய போதிலும் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதோடு, கூடுதல் ஆக்சிஜனும் எனக்கு தேவைப்படுகிறது.

படிக்கட்டுக்கு மேலேயும் கீழேயும் நடக்க சிரமப்படுகிறேன் என கூறியுள்ளார்.

3938 total views