கனடாவில் ஒரே நேரத்தில் காணாமல் போன மகள் மற்றும் தந்தை; புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்

Report

கனடாவில் காணாமல் போன தந்தை மற்றும் மகள் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

குர்பச்சன் லால் என்ற 79 வயது முதியவரும், அவர் மகளான அனிதா வெர்மா (50) என்பவரும் கடந்த 20ஆம் திகதி காணாமல் போனார்கள்.

இருவரும் கடைசியாக McCowan Rd & McNicoll Av பகுதியில் காணப்பட்டனர்.

லால் மற்றும் அனிதா ஒரே நேரத்தில் மாயமானார்கள் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன லால், அனிதா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் அவர்களை கண்டுபிடிக்கும் தொடர்பில் உதவிய பொதுமக்களுக்கு நன்றி எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

11427 total views