கனடாவில் கொரோனா மொத்த தொற்று எண்ணிக்கை 7 இலட்சத்து 9 ஆயிரமாக அதிகரிப்பு

Report
0Shares

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 இலட்சத்து 9 ஆயிரத்து 194 ஆக அதிகரித்துள்ளது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அங்கு கொரோனா தொற்று உறுதியான மேலும் 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 722 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை தொற்றில் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரத்து 189 பேர் குணமடைந்துள்ளதாகவும் 41 ஆயிரத்து 283 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

0 total views