வெளிநாட்டிலிருந்து சென்ற இளம் பெண் இலங்கையில் கைது! அதிர்ந்து போன பொலிஸார்..

Report

கொழும்பு, தெஹிவளை பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

388 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 32 கிலோ 329 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் 23 வயதான பங்களாதேஷ் நாட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இளம் பெண்ணொருவரிடமிருந்து இவ்வளவு பெருந்தொகையான போதைப்பொருள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

20874 total views