ஐ.எஸ் பயங்கரவாதிகள் இலங்கைக்கு அனுப்பிய பெருந்தொகை பணம்

Report

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்ட இலங்கையர்கள் மூவர், இலங்கைக்கு அனுப்பியுள்ள 4 மில்லியனுக்கும் அதிகமான பணம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்கவிடம் நேற்று (15) அறிவித்துள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைவதற்காக ,இலங்கையிலிருந்து முதன் முதல் சிரியாவுக்குச் சென்றவர்களான மொஹமட் முஹுசித் இசாக் அஹமட் மற்றும் அவரது சகோதரரான சர்பாஸ் நிலாம் மற்றும் மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகியோர் இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், அந்தப் பணம் தெஹிவளையிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

1491 total views