வவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பொருட்கள் மீட்பு.

Report

வவுனியா மரக்காரம்பளையிலுள்ள கைவிடப்பட்ட மர்ம வீடு ஒன்று இன்று காலை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சில பொருட்கள் மற்றும் ஆவணங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீடு நீதிமன்ற அனுமதியுடன் படையினரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு கைவிடப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உடல் அங்கிகள், ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு என்பன மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருவதாகத் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

992 total views