2ம் உலகப்போரின் இராணுவத்தின் பதுங்குகுழி - மக்கள் பார்வைக்கு!

Report

இரண்டாம் உலகப்போர் இடம்பெற்ற காலத்தில் பிரித்தானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட நிலத்தடி பதுங்குகுழி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

ஸ்ரீஜெயவர்த்தனபுர கோட்டை மாநகரசபை இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

நாவல மயானத்திற்கு அருகில் குறித்த நிலத்தடி பதுங்குகுழி அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமித்து வைக்க பிரித்தானிய இராணுவத்தினால் இது உருவாக்கப்பட்டிருந்தது.

பிரமாண்ட இந்த பதுங்குகுழி கடந்த பல வருடங்களாக மூடப்பட்ட நிலையில் இருந்தது.

அத்ற்குள் வௌவால்கள் கூடு கட்டிய நிலையில், பாவனைக்குதவாத நிலையில் இருந்த பதுங்குகுழியை கோட்டை மாநகரசபை சுத்தம் செய்து, தற்பொழுது பொழுதுபோக்கிடமாக மாற்றியுள்ளது.

6419 total views