நெருக்கடியான தருணங்கள் நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றன- டிரம்பிற்கு மோடி பதில்

Report

கொரோனா போன்ற நெருக்கடியான தருணங்கள் நண்பர்களை மேலும் நெருக்கமாக்குகின்றதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு தெரிவித்துள்ளார்.

மலேரியா மருந்திற்காக நன்றி தெரிவித்து டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கே மோடி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அத்துட அந்த பதிவில் மிகவும் நெருக்கடியான தருணங்களில் நண்பர்கள் மத்தியில் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் நண்பரே என மோடி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தருணங்கள் நண்பர்களை நெருக்கமாக்குகின்றன என குறிப்பிட்டுள்ள மோடி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு முன்னர் எப்போதையும் விடவலுவானதாக காணப்படுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 ற்க்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்திற்காக இந்தியா அனைத்தையும் செய்யும் எனவும் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள மோடி நாங்கள் இணைந்து வெற்றிபெறுவோம் எனவும் மோடி பதிவிட்டுள்ளார்.

3106 total views