ஸ்விட்சர்லாந்தில் பாராசூட் விளையாட்டின் போது கிழே விழுந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

Report

ஸ்விட்சர்லாந்தில் பாராசூட் விளையாட்டின் போது பாராசூட் சிக்கியதால் கீழே விழுந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ஸ்விட்சர்லாந்தின் லெஸ் பிளேடஸ் மலையில் பாராசூட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் ஆயிரம் அடிக்கு மேல் விளையாடிக் கொண்டிருந்த போது பாராசூட் கயிறுகள் பின்னிக் கொண்டதால் அவர் நிலைதடுமாறினார்.

அப்போது பாராசூட்டை விரிக்க அவர் முயன்ற போது, சிக்கல் மேலும் அதிகமானதால் அவசரகாலத்தில் உபயோகிக்கப்படும் சிறிய பாராசூட்டை விரித்தார்.

ஆனாலும் காற்றின் வேகத்தில் தரையில் விழுந்த அந்த இளைஞர், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

2260 total views