வீழ்ச்சியிலிருந்து எழுவது எப்படி என்பதற்கான வாழும் உதாரணம் -ஸ்மித்

Report

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி கடும் அவமானங்களைச் சந்தித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் முன்பாக கண்ணீர் விட்டு அழுத ஸ்மித்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்றே பலரும் கருதினர்.

அத்துடன் அவரது தந்தையும் ஸ்மித்தின் கிட் பேக்கை கார் ஷெட்டில் தூக்கி எறிந்து வெறுப்பைக் காட்ட மக்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்த பிறகே பெரிய மன உறுதி இருக்கும் என்பதை நிரூபித்துள்ளார் ஸ்மித்.

இந்நிலையில் உலகக்கோப்பை முதலே ஸ்மித் மீது இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய ரசிகர்களும் காட்டம் காட்டி வந்த நிலையில், விராட் கோலி மிக அருமையான ஒரு பாராட்டத்தக்க செயலில் ஸ்மித்தின் கையை உயர்த்தி அவரை ஊக்குவியுங்கள் என்ற செய்கையினை மேற்கொண்டார்.

இந்நிலையில் இது பலராலும் பாராட்டப்பட்டது.

மீண்டும் ஆஷஸ் தொடர் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து ரசிகர்கள் அவரை கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தியதோடு ஏமாற்றுக்காரர் என்றும் வசைபாடி மகிழ்ந்தனர்.

ஆனால் ஒரு அவுஸ்திரேலியராக ரசிகர்கள் மீது ஸ்மித் தன் கோபத்தைக் காட்டாமல் தன் மட்டையின் மூலம் அவர்களிற்கு பதிலடி கொடுத்தார்.

விளைவு 3 சதங்கள்... அதில் ஒன்று அபார இரட்டைச் சதமாகும், ஒரே தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்களை 110.57 என்ற சராசரியில் குவித்து இங்கிலாந்து ரசிகர்களின் இதயங்களை வென்றார் ஸ்மித்.

கடைசியில் ஏமாற்றுக்காரர் என பட்டங்களை கொடுத்த அதே ரசிகர்கள் நேற்று அவர் ஆட்டமிழந்து செல்லும் போது எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.

கடந்த மார்ச் 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடாமல் இருந்த ஸ்மித் அதன் பிறகு வந்து பலரது இதயங்களையும் அதுவும் பகைவர்களின் இதயங்களையும் வென்று விட்டார். இது ஒன்றும் சாதாரணமானது கிடையாது.

இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு ஸ்மித்தின் துடுப்பாட்டம் இரவுகளில் சொப்பனமாக வந்து பயமுறுத்தவே செய்யும். ஓஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்து ஆடிய ஷொட்கள் இவர்களின் கண்களை, மனதை விட்டு நீண்ட காலம் அகலாது என தைரியமாகச் சொல்லலாம்.

ஷேன் வோர்ன் பந்துவீச்சை பலவிதமாகவும் அடித்துக் காட்டிய சச்சின் டெண்டுல்கர் பற்றி ஷேன் வோர்ன் இப்படித்தான் கூறினார், “சச்சின் மேலேறி வந்து தலைக்கு மேல் பந்தை தூக்கும் காட்சி என் வாழ்நாளின் தூக்கத்தைக் கெடுக்கும்” என கூறியிருந்தார் . அதே போல்தான் ஸ்மித்தின் ஆட்டம் ஜோ ரூட் உள்ளிட்டவர்களின் தூக்கத்தை கெடுக்கும் என்கின்றார்கள் ரசிகர்கள்.

ஈஈளாஈஈள் ஸ்மித் மக்களின் பாராட்டு குறித்து கூறும்போது, “நல்ல ஒரு வரவேற்பு, இன்னும் கொஞ்சம் ரன்களை எடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நம்பர் 1 இடத்தை கோலியை விட தொலைவுக்குக் கொண்டு சென்ற ஸ்மித், வீழ்ச்சியிலிருந்து எழுவது எப்படி என்பதற்கான வாழும் உதாரணம் என கிரிகெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

334 total views