யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி அழிப்பு; ஜெனிவாவில் கண்டனப் போராட்டம்!

Report
29Shares

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவுத் தூபியை இடித்தழித்தமையைக் கண்டித்து ஜெனிவாவில் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டம் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ஜெனிவா ஐ.நா. மனிதவுரிமைப் பேரவை முன்றிலான முருக தாசன் திடலில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

கொட்டும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் சுவிஸ் இளையோர் அமைப்புடன் இணைந்து தமிழின உணர்வாளர்கள் மற்றும் மக்களும் தமது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற இப்போராட்டம் மனிதவுரிமைகள் சார்ந்தோரையும் வேற்றின மக்களையும் பெரிதும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2024 total views