இரண்டாவது நாளாகவும் தங்கம் விலையில் வீழ்ச்சி

Report

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது பெரிய அளவில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது.

எனினும் கடந்த ஏப்ரல் 1 லிருந்து இன்று வரையில் இரண்டு தினங்கள் மட்டுமே சற்று விலை குறைந்துள்ளது.

மீதமுள்ள 7 நாட்களில் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம் கண்டு கொண்டே வருகிறது.

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் ஏப்ரல் 1-லிருந்து ஒரே நாள் மட்டுமே வீழ்ச்சி கண்டு மற்ற நாட்கள் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகிறது.

இதற்கிடையில் இன்று தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று 0.04% குறைந்து, 1,683.70 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 51 ரூபாய் குறைந்து, 44,890 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

எனினும் கடந்த ஐந்து தினங்களாகவே எம்சிஎக்ஸ் சந்தையில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், எம்சிஎக்ஸ் சந்தியயில் அவ்வளவாக அது எதிரொலிக்கவில்லை என்றே கூறலாம்.

ஆபரணம் தங்கம் விலை ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே, அதாவது கடந்த 9 தினங்களில் இரண்டு நாட்கள் மட்டுமே சற்று குறைந்துள்ளது.

எனினும் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,004 ரூபாயாகவும், சவரனுக்கு சற்று அதிகரித்து 32,032 ரூபாயாகவும் விற்பனை வருகிறது.

இந்த நிலையில் ஆபரண வெள்ளி விலை தங்கம் விலையை போலவே வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து கிராமுக்கு 40.96 ரூபாயாகவும், இதே கிலோ 40,960 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளியின் விலையானது கடந்த ஒன்பது தினங்களில் ஒரே நாள் மட்டும் சற்று குறைந்துள்ளது.

உலகளவில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அவ்வப்போது சற்று இறக்கம் கண்டாலும், விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு தான் வருகிறது.

ஏனெனில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம், சர்வதேச பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிற நிலையில், இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும் அமெரிக்காவில் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களால் அந்த நாட்டு நாணயம் வலுவடைந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது தங்கம் விலையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஆக இன்று சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

11353 total views