கனடிய தமிழ் பாடகி சாம்பவிக்கு பிரபல தென்னிந்திய பாட்டு குயில் சுசிலா புகழாரம்!

Report

சமீபத்தில் YouTube இணையத்தில் "சொன்னது நீதானா" என்ற பழைய பாடலின் புதிய பரிமாணத்தை கனடாவிலுள்ள பிரபல இசை தயாரிப்பு நிறுவனமான மின்னல் மியூசிக் வெளியிட்டிருந்தது.

இந்த பாடலை பார்த்த திருமதி சுசிலா அவர்கள் அந்த பாடலை பாடிய செல்வி சாம்பவி ஷண்முகானந்தனையும் (இணுவிலை சேர்ந்தவர்), மின்னல் மியூசிக் நிறுவனர் செந்தில் குமரனையும், பங்கு கொண்ட இசை கலைஞர்களையும் அவர் வாழ்த்தியுள்ளார்.

அதில் குறிப்பாக பாடகி சாம்பவியின் பாடல் திறனை மிக அழகாக வர்ணித்து வாழ்த்தியுள்ளார்.

இது கனடிய தமிழருக்கு மட்டுமல்ல, உலகில் பல்வேரு பாகங்களில் வாழும் ஈழ தமிழருக்கு எல்லோருக்கும் பெருமை தான்.

"ஒரு புதுத்தொடக்கம் எப்போதும் சாத்தியமானது" என்று நம்பிக்கை தரும் வசனங்களோடு நிறைவு பெரும் இந்த இசை காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

11046 total views