வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு! போட்டியாளர்கள் வெளியேற்றம்

Report
864Shares

பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 , 50 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் நிவர் புயல் தாக்குதலை அடுத்து சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று இரவு சுமார் 9 ஆயிரம் கன அடி வினாடிக்கு திறந்துவிடப்பட்டது.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட் போடப்பட்டுள்ளது.

அந்தவகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் (Chembarambakkam Lake) தண்ணீர் திறந்து விட்டதும் இந்த ஸ்டூடியோ முழுவதுமே வெள்ளத்தால் சூழ்ந்துவிட்டதாகவும், பிக்பாஸ் வீட்டில் கூட தண்ணீர் புகுந்து விட்டதாகவும் இதனால் போட்டியாளர்கள் கடும் அச்சத்துடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஸ்டார் ஹோட்டலில் நேற்று இரவு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மழை நின்று விட்டதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று ஒளிபரப்ப வேண்டிய பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அவை இன்று ஒளிபரப்ப இருப்பதாகவும் இன்று இரவுக்குள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

31896 total views