தெளிவான திட்டம் அவசியம்: ஐரோப்பிய தலைவர்கள்

Report

பிரெக்ஸிற்றை தாமதப்படுத்த பிரித்தானியா விரும்பினால் தெளிவான திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவதற்கான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை இல்லாதொழிக்காது எனவும் ஐரோப்பிய ஒன்றிய தெளிவார்கள் எச்சரித்துள்ளனர்.

பிரெக்சிற்றுக்கு மாற்றுத்திட்டம் ஒன்று இல்லாமல் போனால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்க்க முடியாது போகலாமென பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரான்சின் இக்கருத்தை எதிரொலிக்கும் வகையில் பிரெக்ஸிற்றை பிற்போடுவது தீர்வாகாது என ஜேர்மனியின் நீதியமைச்சர் கத்தரீனா பார்லி வலியுறுத்தியுள்ளார்.

பிரெக்ஸிற் தாமதத்தை பிரித்தானியா விரும்பினால் அதன் மூலம் வித்தியாசமான முடிவு கிடைக்குமென்பதை உறுதிப்படுத்த வேண்டுமென டச்சு பிரதமர் மார்க் ருட்டே-வும் தெரிவித்துள்ளார்.

2779 total views