ஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராக முதல் தடவை பெண் ஒருவர் தெரிவு

Report

ஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக ஜேர்­ம­னியைச் சேர்ந்த உர்­ஸுலா வொன் டெர்லேயன் குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் நேற்று முன்­தினம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.

இதன் மூலம் ஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது பெண் என்ற பெரு­மையைப் அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மைய வலது சாரி பாது­காப்பு அமைச்­ச­ரான அவர் மேற்­படி ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக பணி­யாற்றும் ஜீன் கிளோட் ஜங்­கரின் பதவி நிலைக்கு எதிர்­வரும் நவம்பர் முதலாம் திகதி நிய­மி­க்கப்­ப­ட­வுள்ளார்.

அவ­ருக்கு ஆத­ர­வாக ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தின் அரைப்பங்­கிற்கு அதி­க­மான உறுப்­பி­னர்கள் வாக்­க­ளித்­துள்­ளனர்.

ஐரோப்­பிய ஒன்­றிய சட்­டங்­களை வரை­வ­துடன் ஐரோப்­பிய ஒன்­றிய சட்ட விதி­களை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் தேவைப்­படும் பட்­சத்தில் அங்­கத்­துவ நாடுகள் மீது தண்டப் பண விதிப்பை மேற்­கொள்­ளவும் இந்த ஆணை­ய­கத்தி ற்கு அதி­கா­ர­முள்­ளது.

வாக்­கெ­டுப்பிலான வெற்­றி­யை­ய­டுத்து உர்­ஸுலா உரை­யாற் று­கையில் ''நீங்கள் என் மீது வைத்த நம் பிக்கை ஐரோப்பா மீது வைத்த நம்பிக் கையாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.

305 total views