வெள்ளத்தில் மூழ்கியுள்ள இத்தாலி வெனிஸ் நகரம்

Report

50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்ததால் அழகிய இத்தாலி வெனிஸ் நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், செயின்ட் சதுக்கத்தில் உள்ள பேராலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் வெனிஸ் நகரம் அமைந்துள்ளது. இந்நகரின் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் 12-ம் திகதி சுமார் 1.87 மீட்டர் (6 அடி) உயரத்துக்கு அலைகள் வீசியுள்ளன.

தொடர்ந்து நகரை நோக்கி வீசிய இத்தகைய ஆளுயர அலைகளால் நகரில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அலைவீச்சில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அந்த நகரின் அவசரகால சேவைக் குழு ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

அந்நாட்டு ஊடகங்கள் அளிக்கும் தகவலின்படி 78 வயதான முதியவர் ஒருவர் அலைவீச்சில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் எனத் தெரிகிறது. மீட்புக்காக கூடுதலாக நீர்வழி ஆம்புலென்ஸ் படகுகள் அப்பகுதியில் பணியாற்றுகின்றன.

5035 total views