ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள இத்தாலி!

Report

கொரோனா வைரஸ் 'தடுப்புப்பட்டியல்' தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஐரோப்பிய நாடான இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸால் இத்தாலியர்களை தொழுநோயாளிகள் போலவும் மற்றும் கோடைகால சுற்றுலா பருவத்தில் இத்தாலி பயணிகளை ‘தடுப்புப்பட்டியல்’ சேர்த்து போல அரசாங்கங்கள் மோசமாக நடத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் வீழும் என்று இத்தாலியின் வெளியுறவுத் துறை அமைச்சர் லூய்கி டி மாயோ எச்சரித்துள்ளார்.

இந்த கோடையில் குறிப்பிட்ட நாடுகளை மட்டும் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டிற்கு வரவேற்பதாக 28 நாடுகளின் பட்டியலை கிரீஸ் வெளியிட்டது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் வெளியிட்ட பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா உள்ளிட்ட அதிக நோய்த்தொற்று விகிதங்களைக் கொண்ட பிற நாடுகள் இடம்பெறவில்லை.

அதனால், பட்டியலில் இடம்பெறாத நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கிரீஸ் நாட்டிற்குள் அனுமதிக்கப்படமாட்டர்கள்.

கிரீஸின் இந்த அறிவிப்பை அடுத்து லூய்கி டி மாயோ பேஸ்புக்கில் இச்செய்தியை வெளியிட்டார்.

சுற்றுலாவுக்கான போட்டி வரவேற்கத்தக்கது தான், ஆனால் வைரஸ் ஊரடங்கிற்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு ஐரோப்பிய பதில் கோருவதில் இது ஆரோக்கியமானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நீங்கள் வித்தியாசமாக மற்றும் தனிச்சியாக செயல்பட்டால், ஐரோப்பிய ஒன்றியம் உற்சாகம் இழக்கும், ஐரோப்பா வீழ்ச்சியடையும் என எச்சரித்துள்ளார்.

4541 total views