வழமைக்கு திரும்பியது இத்தாலி சுற்றுலாத்துறை

Report

ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு இத்தாலி அனுமதியளித்துள்ளது.

இதற்கான அனுமதி இன்று முதல் வழங்கப்படுகின்றது.

இதேவேளை, உள்ளூர் பிராந்தியங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்படவுள்ளது.

இதனையடுத்து, மக்கள் பிராந்தியங்களுக்கு இடையில் சுதந்திரமாகப் பிரயாணிப்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது.

இத்தாலியின் மொத்த தேசிய உற்பத்தியில், சுற்றுலாத்துறை பிரதான பங்குவகித்து வருகின்றது.

இதேவேளை ஐரோப்பாவில் கொரோனா முடக்கல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், இத்தாலி இந் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1747 total views